அதிமுக வேட்புமனுக்களில் ஜெயாவின் பெருவிரல் ரேகையால் பிரச்சினை ஏற்படலாம்

தஞ்சா­வூர், அர­வக்­கு­றிச்சி திருப்­ப­ரங்­குன்றம் ஆகிய தொகு­தி­களுக்கு அதிமுக சார்பில் சமர்ப்­பிக்­கப்­பட்ட வேட்­பு­ம­னுக்­களில் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் பெரு­விரல் ரேகை பதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் வேட்­பு­ம­னுக்­களை ஏற்­றுக்­கொள்­வ­தில் சிக்கல் ஏற்­படும் என மூத்த வழக்­க­றி­ஞர் துரைசாமி கூறி­யுள்­ளார். தமிழக முதல்­வ­ரும் அதி­மு­க­வின் தலை­வி­யு­மான திரு­வாட்டி ஜெய­ல­லிதா சென்ற மாதம் 22ஆம் தேதி அப்போலோ மருத்­து­வ­ மனை­யில் அனு­ம­திக்­கப் ­பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நிலை­யில், அடுத்த மாதம் 19ஆம் தேதி இரண்டு தொகு­தி­களில் தேர்­த­லும் திருப்­ப­ரங்­குன்றம் தொகு­தி­யில் இடைத்­தேர்­த­லும் நடை­பெ­ற­ இ­ருப்­ப­தால் சென்ற வெள்­ளிக்­கிழமை வேட்­பு­ம­னுக்­கள் தாக்கல் செய்­யப்­பட்­டன. அதிமுக வேட்­பா­ளர்­களுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்­கும்படி கோரும் ‘பி’ படி­வத்­தில் முதல்­வ­ரின் கையொப்­பத்­துக்­குப் பதிலாக அவரது இட­துகைப் பெரு­விரல் ரேகை பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் மனுக்­களின் மற்றொரு படி­வத்­தில் அவரது கையொப்­பம் உள்ளது.

ஒரே மனுவின் ஒரு படி­வத்­தில் கையொப்­ப­மும் மற்றொரு படி­வத்­தில் பெரு­விரல் ரேகையும் பதி­வு ­செய்­யப்­பட்­டி­ருப்­ப­தால் வேட்பு மனுக்­கள் செல்­லு­ப­டி­யா­க­மாட்டா என மூத்த வழக்­க­றி­ஞர் துரைசாமி குறிப்பிட்டுள்­ளார். இது தொடர்­பாக விளக்­கம் அளித்­தி­ருந்த தேர்தல் ஆணையம், கையெழுத்­திட இயலாத நிலையில் உள்ள ஒருவர் வேட்­பு­ம­னு­வில் பெரு­விரல் ரேகை வைக்­க­லாம் எனக் குறிப்­பிட்­டி­ருந்தது.2016-10-31 06:00:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்

பிரசாதம் வாங்க நெகிழிப் பைகளுக்குப் பதில்  சணல், காகிதம், அட்டை போன்றவற்றாலான பைகள், பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கோப்புப்படம்

20 Nov 2019

சணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு