சாதனை முயற்சியாக ஒரே சமயத்தில் 82 செயற்கைக்கோள்களை ஏவும் இந்தியா

புதுடெல்லி: ஒரே ஏவுகணை மூலம் 82 செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்தி உலகச் சாதனைப் படைக்கும் முயற்சியில் இந்தியாவின் இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனமான இஸ் ரோ இறங்கியிருக்கிறது. இஸ்ரோவின் வணிக நிறுவன மான 'ஆன்ட்ரிக்ஸ் கார்ப்ரேஷன்' சார்பில் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகிய வற்றை உள்ளடக்கிய வெளி நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும். அனைத்துலக அளவில் ஆன் ட்ரிக்ஸ் நிறுவனத்தின் செயல் பாடுகள் மற்ற நாடுகளின் ஏவு கணை நிறுவனங்களைவிட வியப் பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ சார்பில் முதன் முறையாக 82 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் ஒரே ஏவுகணையில் விண்ணில் ஏவப்படவுள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் செலுத்தப்பட்ட 25 நிமிடங்களுக்குள் விண்வெளியில் நிலை நிறுத்தப்படும். இந்தியாவின் இந்த உலக சாதனை முயற்சி 2017 ஜனவரி 15ல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தத் தகவலை மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இஸ் ரோவின் செவ்வாய் விண்வெளி திட்ட இயக்குநர் சுப்பையா அருணன் வெளியிட்டார்.

இதற்கு முன் ரஷ்ய விண்வெளி நிறுவனம் 2014ல் 37 செயற்கைக் கோள்களை ஒரே ஏவுகணை மூலம் அனுப்பியுள்ளது. அமெரிக்கா விண்வெளி மையம் 2013ல் 29 செயற்கைக் கோள்களை அனுப்பியது. கடந்த ஜூன் மாதம் ஆக அதிகமாக 20 செயற்கைக் கோள்களை இஸ்ரோ அனுப்பியது. இதையொட்டி 82 செயற்கைக் கோள்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!