ஓட்டுநர் கொல்லப்பட்ட விவகாரம்; மோடி கவலை

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலிய பிரதமரை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத் தினார். பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மன்மீத் அலிஷெர் என்ற பேருந்து ஓட்டுநரை பயணி ஒருவன் திடீரென தீ வைத்து கொளுத்தினான். இந்தச் சம்பவம் பல பயணிகள் கண்முன்னே நடைபெற்றது. இதில் காயமடைந்த ஓட்டுநர் உட்பட ஆறு பேரையும் மற்றவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் படுகாயம் அடைந்த ஓட்டுநர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல் வதற்கு முன் இறந்தார்.

ஓட்டுநருக்குத் தீ வைத்தவன், காவல் துறையினரிடம் ஒப் படைக்கப்பட்டான். இதற்கிடையே தீ வைத்தவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் ஆஸ்தி ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்லிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி அவரிடம் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு இந் தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும் இந்திய வம்சாவளி ஓட்டுநர் கொலை செய்யப்ப ட்டது குறித்து மோடி கவலைத் தெரிவித்தார். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறிய பிரதமர் டர்ன்புல், தனது அதிர்ச் சியையும் மோடியிடம் பகிர்ந்து கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!