இந்தியா: எட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் (சிமி) சேர்ந்த பயங்கரவாதிகள் எட்டுப் பேரை இந்திய போலிசார் சுட்டுக் கொன்றனர். மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள மத்திய சிறைச்சாலை யில் இருந்து நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அந்த எட்டுப் பேரும் தப்பிச் சென்றனர். அங்கிருந்த ஒரு பாதுகாவலரைக் கட்டிப் போட்டுவிட்ட அவர்கள் தங்க ளைத் தடுக்க முயன்ற ராம்சங்கர் என்ற தலைமைக் காவலரின் கழுத்தை அலு மினியத் தட்டாலும் கரண்டிகளாலும் அறுத்துக் கொன்றனர். பின் போர்வை களைக் கயிறுபோல கட்டி, 20 அடி உயரம் கொண்ட சிறையின் சுற்றுச்சுவர் மீதேறி, வெளியே குதித்து தப்பியோடினர்.

அவர்கள் தப்பியோடிய விவரம் சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னரே தெரிய வந்ததாகக் கூறப்பட்டது. இதை அடுத்து, அவர்கள் போபாலைவிட்டுத் தப்பி ஓடிவிடாத வகையில் மாவட்ட எல்லை முழுவதும் மூடப்பட்டது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, துப்பு தருவோருக்கு ரூ.5 லட்சம் (S$10,000) பரிசு என அறிவிக் கப்பட்டது. இந்நிலையில், போபாலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் அந்த எட்டுப் பேரும் பதுங்கி இருப்பதாக உள்ளூர்வாசிகள் போலிசா ருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலிசார் பயங்கரவாதிகளைச் சுற்றி வளைத்தனர். சரணடையுமாறு போலிசார் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த பயங்கரவாதிகள் போலிசாரை நோக்கிச் சுட்டதாகவும் வேறு வழியின்றி போலிசார் பதிலுக்குச் சுட்டதில் அவர்கள் அனைவரும் மாண்டுபோனதாகவும் போபால் உயர் போலிஸ் அதிகாரி யோகேஷ் சௌத்ரி சொன்னதாக ‘என்டிடிவி’ செய்தி கூறியது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ‘என்கவுன்டரில்’ போலிசார் இருவர் காயமடைந்தனர். தீபாவளி நாளில் பட்டாசுகளால் சுற்றுப் புறத்தை அடர்ந்த புகை சூழ்ந்துவிடும், பட்டாசு ஒலிகளும் நமக்குச் சாதகமாக இருக்கும், அதுதான் தப்பியோட சரியான தருணம் என்று அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

24 மணி நேர மின்னணு கண்காணிப்பு முறையும் பலத்த காவலும் உள்ள போபால் சிறைச்சாலையில் இருந்து தப்பி அங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் தஞ்சம் புகுந்த பயங்கரவாதிகளை போலிசார் ‘என்கவுன்டர்’ நடத்திக் கொன்றனர். படம்: இந்திய ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்

பிரசாதம் வாங்க நெகிழிப் பைகளுக்குப் பதில்  சணல், காகிதம், அட்டை போன்றவற்றாலான பைகள், பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கோப்புப்படம்

20 Nov 2019

சணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு