டெல்லியைச் சூழ்ந்த புகைமூட்டம்

உலகின் மாசடைந்த நகரங்களில் ஒன்றான இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்றின் தரம் இவ்வாண்டு தீபாவளியின்போது படுமோசமாக இருந்தது. தென்மாநிலங்களில் கடந்த மாதம் 29ஆம் தேதி கொண்டாடப் பட்ட தீபாவளி வடஇந்திய மாநிலங் களில் நேற்று முன்தினம் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முதல் நாள் சனிக்கிழமையில் இருந்தே டெல்லிவாசிகள் பட்டாசு களை வெடிக்கத் தொடங்கினர். நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை அது தொடர்ந்ததால் டெல்லி யின் பெரும்பாலான வட்டாரங்கள் புகைமண்டலமாகக் காட்சியளித்தன.

போதாதற்கு இரவில் பனிப் பொழிவும் இருந்ததால் பனியும் புகையும் கலந்து பனிப்புகையாக மாறியது. எதிரில் இருப்பவர்கூடத் தெரியாத அளவிற்குப் பல இடங் களையும் புகைமூட்டம் சூழ்ந்திருந் தது. பகலில்கூட முன்விளக்கை எரியவிட்டபடியே வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து சென்றன.

நல்ல உடல்நிலையுடன் இருப்ப வர்களும் வெளியில் சென்றால் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படும் அளவிற்கு நிலைமை முற்றியது. இதனால் வெளியில் செல்ல முடியாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேரிட்டது. நுரையீரல் வரை செல்லக் கூடிய, பிஎம்2.5 தரத்தில் வரும் மிக நுண்ணிய தூசு, துகள்களின் எண்ணிக்கை சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே இரு மடங்கு கூடி ஒரு கனஅடிக்கு 750ஆக உயர்ந்தது என்று இந்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டது. ஒரு கன அடிக்கு 60க்கும் கீழிருப்பதே பாதுகாப் பான அளவு.

அதேபோல, நகரில் மிக அதிகமாகக் காற்றுத் தூய்மைக் கேட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியில் பிஎம்10 தரநிலையின் அளவு ஒரு கனஅடிக்கு 4,273 என 42 மடங்கு கூடி மிக மிக அபாயகரமான அளவை எட்டி யது. பிஎம்10ஆனது நூறுக்கும் கீழிருந்தால் மட்டுமே ஓரிடத்தில் காற்று நல்ல தரத்துடன் இருப்ப தாகக் கூற முடியும். அதேபோல, தீபாவளியின் ஒலி மாசுபாடு காரணமாகவும் டெல்லி கடுமையாகப் பாதிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, உடல்நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்காற்றை வடஇந்தியக் குழந்தைகள் சுவாசிப்பதாக யுனி செஃப் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகில் இரண்டு பில்லியன் குழந்தைகள் நச்சுக்காற்றைச் சுவாசிப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் வடஇந்தியா வையும் இந்தியாவின் அண்டை நாடுகளையும் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. முன்னதாக, டெல்லியில் காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கும் விதமாக முக்கிய இடங்களில் காற்றுத் தூய்மை யாக்கிகள் நிறுவப்படும் என்று சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

தீபாவளி நாளன்று டெல்லியில் காற்றின் தரம் பாதுகாப்பான அளவைவிட 42 மடங்கு அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இத்தகைய அபாயகரமான நிலையிலும் இந்தியா கேட் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலிசார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!