பசுக்கள், காளைகளால் மிதிபடும் பக்தர்களும் விநோத வழிபாடும்

தகோட்: குஜராத் மாநிலம், தகோட்டில் மண் தரையிலான மைதானத் தில் குப்புறப்படுத்த நிலையில் பசுக்கள், காளைகளால் மிதிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் விழா (படம்) நடைபெற்றது. முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இந்து வருடப் பிறப்பாகவும் பழங்குடி மக்கள் இந்த விழாவைக் கருதுகின்றனர். வழக்கமாக தீபாவளி முடிந்து 3ஆம் நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பசுக்களுக்கும் காளைகளுக்கும் வர்ணங்கள் பூசி, மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவை தெருக்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பக்தர்கள் தரையில் படுத்து மிதிபட்டனர். இதனால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பழங்குடிகளின் நம்பிக்கையாக உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு