கி.வீரமணி: தமிழகத்திலேயே தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை

சென்னை: தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஆட்சி மொழிப் பட்டியலிலும் தமிழ் இடம்பெறவில்லை எனக் கூறியுள்ளார். “ஓர் இனம் என்றால் மொழியால், வழியால், விழியால் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்,” என்றும் கி.வீரமணி மேலும் தெரிவித்துள்ளார்.