அமைச்சர்கள் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடி, ரகளை

நாகர்கோவில்: அமைச்சர் கள் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடி மோதலில் ஈடுபட்டதால் நாகர்கோவிலில் அக்கட்சியினர் இடையே பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் இருவரும் பங்கேற்றனர். அப்போது அமைச்சர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் திடீரென கைகலப்பிலும் ஈடுபட்டதால் அமைச்சர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த குமரி மாவட்ட ஆட்சியரும் அதிர்ச்சி அடைந்தனர். இம்மோதலில் காயம் ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் பரிசு வாங்குவதற்காக வந்திருந்த பள்ளி மாணவ, மாணவியர் இம்மோதலைக் கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அதிரடிப்படை போலிசார் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்தது டன், அமைச்சர்களையும் ஆட்சியரையும் பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். சில நிமிடங்களில் அமைதி ஏற்பட்டதும் அமைச்சர்கள் மீண்டும் மேடைக்கு வந்து மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினர். மோதல் குறித்து கட்சி மேலிடத்தி டம் புகார் செய்யப் போவதாக இருதரப்பினரும் கூறியுள்ளனர். இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு