உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு; ஆடம்பரப் பொருட்களுக்குக் கூடுதல் வரி

புதுடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி 5%, 12%, 18%, 28% என நான்கு விதமாக வசூலிக்கப்பட உள்ளது. அத்தியா வசியப் பொருட்களுக்கு குறைந்த அளவு வரியும் ஆடம்பரப் பொருட் களுக்கும் பயனற்ற பொருட்களுக் கும் கூடுதல் வரி விதிக்கவும் கடந்த இரு நாட்களாக நடந்த ஜிஎஸ்டி மன்றக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமை வகித்ததாக பிடிஐ ஊட கம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரி யான வரிவிதிப்பை மேற்கொள் வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பொருள் சேவை வரி மசோதா சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜிஎஸ்டி மன்றக் கூட்டத்திற்குப் பின் அருண் ஜெட்லி செய்தி யாளர்களிடம் பேசினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு