8 வயது சிறுமியைக் கொன்ற சிறுத்தை உயிருடன் எரிப்பு

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் எட்டு வயதுச் சிறுமியைக் கொன்ற சிறுத்தையை கிராம மக்கள் ஒன்று திரண்டு உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூரத் மாவட்டத்தில் உள்ள வடி என்ற கிராமம் வனப்பகுதியின் எல்லையில் உள்ளது. இரைதேடி காட்டை விட்டு ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று எட்டு வயது சிறுமியைத் தாக்கியது. இதில் அந்தச் சிறுமி பலியானார். சிறுத்தை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பிச் சென்று சுற்றித் திரிந்தது.

மனிதர்களைக் கொல்ல முயன்ற சிறுத்தையின் செயலை அறிந்து வனத்துறையினர் கூண்டு அமைத்து சிறுத்தையைப் பிடித்து அடைத்து வைத்தனர். கட்டாயப்படுத்தி அவர்களை வெளியேற்றிய கிராம மக்கள் கூண்டுக்குள் இருந்த சிறுத்தையின் மீது மண் ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்தனர். அதனால் சிறுத்தை துடிதுடித்தது. சிறுத்தை இறக்கும் வரையில் அவ்விடத் துக்கு அதிகாரிகளை நுழைய விடாத கிராம மக்கள் பின்னர் சிறுத்தையைப் பழிவாங்கிய திருப்தியுடன் கலைந்து சென் றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!