“தமிழக மீனவர்களை இனி தாக்க மாட்டோம்”

புதுடெல்லி: கடல் எல்லையை தாண்டும் மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என இலங்கை அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். புதுடெல்லியில் தமிழக, இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமவீராவும், மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமர வீராவும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையில் மீன் பிடிப்பது தொடர்பான எல்லை வரையறை மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை விடுவிப் பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்க ளிடம் பேசிய இலங்கை அமைச் சர்கள், எல்லை தாண்டும் மீனவர் கள் மீது இனி தாக்குதல் நடத்தப் படாது என்று தெரிவித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு