தமிழக வாகன எண்ணிக்கை 2.30 கோடியாக உயர்வு

சென்னை: ஏற்கெனவே சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் பெருகி வரும் வாகனப் போக்கு வரத்தால் அவதியுறும் நிலையில், தமிழகத்தில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 2.30 கோடி எனத் தெரியவந்துள்ளது. இதில், இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை மட்டும், 83 விழுக் காட்டிற்கும் அதிகம் என்கின்றன புள்ளி விவரங்கள். கடும் போக்குவரத்து நெரிசல் நிலவினாலும் கூட தமிழகத்தில், புதிய வாகனம் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

கடந்த 1993ல், தமிழகத்தில் வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 18.26 லட்சம்தான். இது, 2000ல், 39.93 லட்சமாகவும், பின்னர் 2005ல், 71.72 லட்சமாக வும் ஏற்றம் கண்டது. இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் மாத முடிவில் வாகனங்க ளின் எண்ணிக்கை 1.98 கோடி யாக இருந்தது. ஆண்டு முடிவில் இந்த எண்ணிக்கை 2.15 கோடியைத் தொட்டது. இந்நிலையில், தமிழகத்தின் வாகன எண்ணிக்கை கடந்த அக் டோபர் துவக்கத்தில், 2 கோடியே 29 லட்சத்து, 43 ஆயி ரத்து, 555 என்கின்றன புள்ளி விவரங்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேய் போன்ற வேடமிட்ட இவர்கள் வாகனங்களில் சென்றவர்களை பயமுறுத்தியதுடன் நில்லாமல் திறந்த வெளியில் தூங்கிக்கொண்டிருந்தவர்களையும் குறிவைத்ததாகத் தெரிகிறது. படம்: ஊடகம்

13 Nov 2019

பேய் வேடமிட்டு பதற வைத்த இளையர்களைக் கைது செய்து கதறவிட்ட அதிகாரிகள்

காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாததால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மகாராஷ்டிர ஆளுநர் கோஷியாரி பரிந்துரைத்தார். படம்: ஊடகம்

12 Nov 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி