ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 8 லட்சத்தோடு பறந்த திருடர்கள்

பலசோர்: ஒடிசா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஐசிசிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் நுழைந்து, கட்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி உள்ளே இருந்த பணத்தைக் கொள்ளை அடித்துள்ளனர். கொள்ளைபோன பணம் சுமார் 8 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. போலிசார் கொள்ளையர்களைத் தேடிவருகிறார்கள்.