சோகத்தில் முடிந்த சாத் பூஜை: 6 பெண்கள், 7 சிறார்கள் பலி

பாட்னா: சூரியக் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் மக்கள் கொண்டாடிய சாத் பூஜை யின் கடைசி நாள் விழா நேற்று மிகவும் மோசமான உயிரிழப்பு சம்பவங்களுடன் சோகத்தில் முடிந்தது. சாத் பூஜையை கொண் டாடி முடித்து வீடு திரும்பிய ஆறு பெண்கள் தர்பாங்காவில் உள்ள ராம்பத்ராபூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி உயிரிழந் தனர். அத்துடன், பீகாரில் உள்ள முஸாபர்நகரில் சாத் பூஜை கொண் டாட்டத்தில் கலந்து கொண்ட 7 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

சம்பவம் 1: 7 சிறுவர்கள் பலி திங்களன்று காலையில் சாத் பூஜையில் கலந்துகொண்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உயிரிழந்தனர். பீகாரில் உள்ள பார்க் காவல் நிலைய போலிஸ் உயரதிகாரி மனோஜ் குமார் சின்ஹா கூறுகை யில், "8, 9 வயதுடைய இரு சிறுமிகள் பாட்னா அருகில் உள்ள மாலகி காட் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். அதே இடத்தில் நீரில் மூழ்கிய மற்ற இரு குழந்தைகள் உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்டனர்," என்று தெரிவித்தார்.

சண்டிகாரில் சாத் பூஜையின்போது சூரியக் கடவுளை வேண்டி வழிபாடு நடத்தும் பெண்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாத் பூஜை திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!