திரேசா மே: இந்திய முதலீடுகளால் பிரிட்டனின் பொருளியல் மேம்பட்டுள்ளது

புதுடெல்லி: இந்திய முதலீடுகளால் பிரிட்டனின் பொருளியல் மேம் பட்டுள்ளதாக பிரிட்டன் நாட்டின் பிரதமர் திரேசா மே தெரிவித்து உள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், டெல்லி யில் நேற்று நடைபெற்ற இந்திய- பிரிட்டன் தொழில்நுட்ப மாநாட் டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பங்கேற்றார் (படம்). அப்போது பேசிய திரேசா மே, இந்தியா- பிரிட்டன் இடையேயான பிணைப்பு தனித்துவமானது எனக் குறிப்பிட்டார். இவ்விரு நாடுகளும் இணைந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாகக் கூறிய திரேசா மே, இந்தியாவின் முதலீட்டால் பிரிட்டனின் பொரு ளியல் மேம்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பிரிட்டனில் பொருளியல், சமூக சீர்திருத்தங் கள் பெருமளவில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியன் நாடு களுக்கு வெளியே தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்காக திரேசா மே, இந்தியாவைத் தேர்ந் தெடுத்திருப்பதை சுட்டிக்காட்டி னார். இது இந்தியர்களுக்குக் கிடைத்த பெருமை எனக் குறிப்பிட்ட அவர் சுகாதாரம், எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறை களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!