பிரேமலதா: அதிமுகவுடன் சேர்ந்ததே தவறு

அரவக்குறிச்சி: “அதிமுகவுடன் கூட்டணி வைத்ததே தேமுதிக செய்த மிகப்பெரிய தவறு,” என்று அரவக்குறிச்சி பிரசாரக் கூட் டத்தில் பேசிய பிரேமலதா தெரி வித்துள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் தேமுதிக வேட் பாளரை ஆதரித்து அக்கட்சியின் மகளிர் அணி செயலாளரும் விஜயகாந்தியின் மனைவியுமான பிரேமலதா சூறாவளிப் பிரசாரத் தில் ஈடுபட்டு வருகிறார். அரவக்குறிச்சியில் உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை, பள்ளப் பட்டி ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். “கடந்த காலங்களில் தேமுதிக எந்தத் தவறும் செய்யவில்லை. தேமுதிக மக்கள் நலக் கூட் டணியில் இணைந்ததும் தவறு கிடையாது. திமுகவுடன் ஏன் கூட்டணி சேரவில்லை என்றால் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட இயக்கம் என்பதால் கூட்டணி சேரவில்லை. அதேநேரம் 2011ல் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது பெரிய தவறாகிவிட்டது,” என்று பிரேமலதா குறிப்பிட்டார்.

பிரேமலதா விஜயகாந்த். கோப்புப் படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு