நூதன முறையில் தங்கம் கடத்தல்; எட்டுப் பேர் சிக்கினர்

சென்னை: சென்னையில் நூதன முறையில் தங்கம் கடத்தப்பட்டதை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் எட்டுப் பேரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் எடை 5.9 கிலோவாகும். இதன் மதிப்பு ரூ 1.80 கோடி (S$374,793). இந்தச் சம்பவம் தொடர்பில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

திருச்சியிலிருந்து சென் னைக்குக் காரில் தங்கம் கடத்தப் படுவதாக ரகசியத் தகவல் கிடைத் ததைத் தொடர்ந்து மத்திய வரு வாய் புலனாய்வுப் பிரிவினர் செங் கல்பட்டு அருகே ஜிஎஸ்டி சாலை யில் வாகனச் சோதனையில் ஈடு பட்டனர். பல வாகனங்களை மடக்கி அவர்கள் சோதனையிட் டனர். அப்போது, ஒரு காரில் இருந்த ஏராளமான 'கட்டிங் பிளேயர்' மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டிங் பிளே யரை அதிகாரிகள் ஆய்வு செய்த னர். அப்போது கட்டிங் பிளேயரின் கைப்பிடிகள் வித்தியாசமாக காணப்பட்டதால் அதிகாரிகள் சோதனையிட்டதில் ரப்பர் உறைக் குள் தங்கம் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

'கட்டிங் பிளையர்' கைப்பிடியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!