மகாத்மா காந்தி பேரன் காலமானார்

சூரத்: தேசப் பிதா மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி, 87, உடல்நலக் குறைவால் குஜராத்தில் காலமானார். மாரடைப்பு, மூளையில் ரத்தக் கசிவு காரணமாக சூரத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்த அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்களன்று அவரது உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக கனு காந்தியின் உடல் குஜராத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானி யாகப் பணியாற்றியவர் கனு காந்தி. விடுதலை வேள்வி யின் மைல்கல்லாகக் கருதப்படும் 'தண்டி யாத்திரை' போராட்டத்தின்போது மகாத்மாவின் கைத்தடியைப் பிடித்து அழைத்துச் சென்ற பெருமையும் அவருக்கு உண்டு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!