பழைய ரூபாய் நோட்டுகளை எவ்வாறு மாற்றுவது

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மக்கள் பண பரிவர்த்தனை செய்வது தொடர் பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகள் கூடுதல் நேரம் திறந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் ரூபாய் நோட்டு களை இம்மாதம் 24ஆம் தேதிக் குள் மாற்றலாம். 30ஆம் தேதி வரை தங்களது வங்கிக் கணக்குகளில் பழைய நோட்டைச் செலுத்தலாம்.

வங்கிக் கணக்கு இல்லாதவர் கள், தங்களது உறவினர் அல்லது நண்பர் எழுத்து மூலம் இதற்குச் சம்மதம் தெரிவித்தால் அவர்களின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம். இன்று முதல் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும். ஏடிஎம் மூலம் நவம்பர் 18ஆம் தேதி வரை ஒரு கார்டுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். 19ஆம் தேதி யிலிருந்து 4 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம். ஆனால் வங்கி கிளைகளின் மூலம் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை எடுக்கலாம். ஆனால் வாரத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேல் எடுக்க இயலாது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைதராபாத்தில் ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதிக் கொண்டதில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. படம்: இந்திய ஊடகம்

12 Nov 2019

ஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்