மோடியின் முடிவுக்கு மம்தா, ராகுல் காந்தி எதிர்ப்பு

மோடியின் அதிரடி முடிவை சாமானியர்கள் முதல் பெரும் புள்ளிகள் வரை பாராட்டினாலும் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ஊழலுக்கு எதிரான நட வடிக்கை என்ற பெயரில் ஏழை, எளிய மக்கள் மீ-து பாய்ந்திருக்கும் இதயமற்ற அரக்கத்தனமான நடவடிக்கை இது என்று மோடியை சாடியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இது மோடியின் அரக்கத்தன மான முடிவு என்று கூறியுள்ளார். இந்த முடிவை உடனே திரும்ப பெற வேண்டும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

"வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி அதனை மீட்க முடியாமல் போனதைத் திசை திருப்ப தற்போது நாடகமாடுகிறார்," என்று கூறியுள்ளார் மம்தா. அதுபோல், காங்கிரஸ் கட்சி யின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். "கருப்புப் பணத்தை வெளிநாடு களில் குவித்துள்ள உண்மையான குற்றவாளிகள் பாதுகாப்பாக இருக்க, ஏழை எளிய மக்கள், சிறு வர்த்தகர்கள் உள்ளிட்டோர் இக்கட்டிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். "இதன் மூலம் சாமானிய மக்கள் மீது தனக்கு எவ்வளவு அக்கறை உள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை மோடி காட்டியுள்ளார். "1,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 2,000 ரூபாய் நோட்டுகள் எப்படி கருப்புப் பண பதுக்கலை கடினமாக்கும்?" என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து ள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!