ரூபாய் நோட்டுகளை மாற்றத் தவித்த தமிழக மக்கள்

சென்னை: கருப்புப் பணத்திற்கு கடிவாளம் போடும் வகையில் மத்திய அரசு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டது. கள்ள நோட்டுகளை கட்டுப் படுத்தும் நோக்கிலும் செயல்படுத் தப்பட்ட இந்நடவடிக்கைக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரி வித்துள்ள போதிலும் தங்களுக்கு ஏற்படக்கூடிய உடனடி பாதிப்பு களை மத்திய அரசு கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டதாக சாமா னிய மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகள் எங்கே செல்லாதவை யாகிவிடுமோ என்பதே பொது மக்களின் முதல் கவலையாக இருந்தது. வங்கிகளும் ஏடிஎம் மையங்களும் புதன்கிழமை செயல்படாது என அறிவிக்கப் பட்டதால் இக்கவலை மேலும் அதிகரித்தது.

இதையடுத்து பிரதமர் மோடி யின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏடிஎம் மையங்களை நோக்கி மக்கள் விரைந்தனர். இதனால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மாநிலம் முழுவதும் ஏடிஎம் மையங்களில் கூட்டம் காணப் பட்டது. ஏராளமானோர் ஒரே சம யத்தில் பணம் எடுத்ததால் ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கப் பட்டிருந்த பணம் வேகமாகத் தீர்ந்தது. எனவே பலர் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்.

நள்ளிரவிலும் ஏடிஎம் மையங்களில் காத்துக்கிடந்த பொது மக்கள். படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!