தானியங்கி இயந்திரங்களில் இன்று முதல் புதிய நோட்டுகள்

புதிய 500, 2,000 ரூபாய் நோட்டு களை இன்று முதல் இந்தியாவில் உள்ள தானியங்கி இயந்திரங் களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணம், கள்ள நோட்டு களை ஒழிக்க இதற்கு முன் பயன்பாட்டில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய அரசாங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி யாக அறிவித்தது. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் முடக்கப்பட்டதி லிருந்து இருப்பில் உள்ள இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்ற இந்தியா முழுவதும் மக்கள் விரைந்துள்ளனர். நோட்டுகளை மாற்ற அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

போதுமான அளவு புதிய நோட்டுகளைப் பெற்று பெரும் அளவில் திரளும் வாடிக்கையாளர் களிடம் அவற்றைக் கொடுக்க தயாராகும் நோக்கில் வங்கிகள் நேற்று முன்தினம் மூடப்பட்டி ருந்தன. இருப்பினும், புதிய 500 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை என்று சில வங்கிகள் கூறியுள்ளன.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய 2,000 ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்ட ஆடவர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!