ரூபாய் நோட்டுகள் தொடர்பான நடவடிக்கை: தடை கோரி வழக்கு

புதுடில்லி: ரூபாய் நோட்டுகள் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசார ணையை வரும் செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இதற்கிடையே இதே கோரிக் கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கறுப்புப் பணத்தை ஒரேயடியாக முடக்கும் விதமாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என மத்திய அரசு அண்மையில் அதிரடியாக அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பரவலாக வர வேற்பும் விமர்சனமும் நிலவுகிறது.

இது தொடர்பாக சங்கம் லால் பாண்டே உள்ளிட்ட இருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மத்திய அரசின் இந்நடவடிக்கை பொதுமக்களை வெகுவாகப் பாதித்துள்ளது என்றும் இந்த நடவடிக்கையை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மத்திய அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தடை கோரும் மனு மீது உச்ச நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப் பித்துவிட வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!