ரூபாய் நோட்டுகளை மாற்ற விமான நிலையத்தில் கூடுதல் வசதி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக கூடுதல் முகப்புகளை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள விமான டிக்கெட் பதிவு மையம், நாணய மாற்று முகப்புகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க ஊழியர்கள் மறுத்ததால் சிங்கப்பூர் பயணிகள் உட்பட பல வெளிநாட்டுப் பயணிகள் அவதிக்கு உள்ளாயினர். ஆனால் விமான நிலைய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் பயணிகளின் பணத்தை மாற்ற ஊழியர்கள் சம்மதித்தனர். இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்திலும் பன்னாட்டு முனையத்திலும் பயணிகள் வசதிக்காக எந்தவிதத் தட்டுப்பாடும் இன்றிப் பணத்தை மாற்ற கூடுதலாக ஐந்து முகப்புகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு