‘இந்தியா-இலங்கை பாலம் அமைக்க அரசு தயார்’

ராமேசுவரம்: தமிழகத்தின் தனுஷ் கோடிக்கும் இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையே கடல்வழி பாலம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் தெரிவித்தார். தனுஷ்கோடி-அரிச்சல்முனை இடையே அமைக்கப்பட்ட புதிய சாலை, கடல் கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளதைப் பார்வை யிட்ட அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், “தனுஷ் கோடி-இலங்கை தலைமன் னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்திற்குத் துறைமுகம் அமைக்கவும் பாலம் அமைக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் இலங்கை தரப்பிலிருந்து பதில் இல்லை,” என்று தெரி வித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு