லண்டன் மருத்துவர்: அடுத்த வாரம் ஜெயலலிதா வீடு திரும்பலாம்

சென்னை: தமிழக முதல்வர் ஜெய லலிதா அடுத்த வாரம் வீடு திரும் பலாம் என்று லண்டன் மருத்துவர் பீலே தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று 52வது நாளாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லண்டன் மருத்துவர் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனையின் கீழ் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயல லிதாவுக்கு 'பிசியோதெரபி' சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் நிபுணர்களும் வரவழைக்கப் பட்டனர். இதற்கிடையே, சில நாட் களுக்கு முன் லண்டனில் உள்ள மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலேயை அங்குள்ள தமிழர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவம் சரியான பாதையில் சென்றது. அதை அவருடைய உடலும் ஏற்றுக்கொண்டது. அவர் தற்போது முழுமையாக நலம் பெற்றுவிட்டார். வரும் வாரத்தில் அவர் வீடு திரும்புவதற்கு வாய்ப்பு உள்ளது," என்று திரு பீலே அவர்களிடம் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!