அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது

தோக்கியோ: ஜப்பான்- இந்தியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மூன்று நாட்கள் பயணமாக பிரதமர் மோடி வியாழனன்று தோக்கியோ சென்றார். அந்த நாட்டு மன்னர் அகிஹிட்டோவை நேற்று சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ‌ஷின்சோ அபேவையும் அவர் சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. பொதுவாக அணுஆயுத தடை பரவல் (என்பிடி) ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுடன் ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வது இல்லை.

எனினும் இருநாட்டு நட்பை கருத்திற்கொண்டு முதல்முறை யாக 'என்பிடி' ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுடன் ஜப்பான் அரசு அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அணுசக்தி மூலப் பொருட்கள், தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு ஜப்பான் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வரும் 2032ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணுமின் உற்பத் தியை 10 மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜப்பான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி அங்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!