செல்லா நோட்டுகளை மாற்றாததால் திருடர்கள் கொடுத்த ‘பளார்’

புதுடெல்லியைச் சேர்ந்த தொழி லாளர் ஒருவரிடமிருந்து அவரது பணப்பையைப் பறித்துக்கொண்டு தப்பிய திருடர்கள் அதில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருப்பதைக் கண்டு திரும்பவும் அந்த தொழிலாளரிடம் சென்று பணப்பையை அவரது முகத்தில் வீசியெறிந்தனர்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று கோபத்தில் அந்தத் தொழிலாளரின் கன்னத் தில் அந்தத் திருடர்கள் ஓங்கி அறைந்து அங்கிருந்து தப்பி ஓடினர். தம்மிடம் இருக்கும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை அந்தத் தொழி லாளர் மாற்ற கடந்த இரண்டு நாட்களாக வங்கி வாசலில் காத்திருந்து ஏமாற்றமடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரிடமிருந்த பணப்பை பறிக்கப்பட்டது மட்டு மல்லாது தமது பணப்பையைத் திருடியவர்களே திரும்ப வந்து தம்மை அறைந்ததை மன வேதனையுடன் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!