கங்கையில் மிதந்த ரூ.1,000 நோட்டுகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கங்கை நதியில் 1,000 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்துக் காவல்துறை கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறும்போது, “கங்கை நதியில் நயாகத் பகுதியில் 1,000 ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்ததை அப்பகுதியில் சிலர் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கிழிந்த நிலையில் இருந்த 19 நோட்டுகளை நதியில் இருந்து மீட்டு விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.