கோயில் உண்டியலில் ஒரேநாளில் ரூ.44 லட்சம் காணிக்கை

வேலூர்: தமிழகத்தில் உள்ள வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோயில் உண்டியலில் முதல் முறையாக கத்தை கத்தையாக ரூ.44 லட்சம் பணத்தை போட்டுச் சென்றுள்ளனர். கடந்த 36 ஆண்டுகளில் ஒரேநாளில் இப்படி பக்தர்கள் யாரும் இவ்வளவு அதிக அளவில் பணத்தை உண்டி யலில் போட்டுச் சென்றதில்லை என்றும் கூறப்படுகிறது. வேலூர் கோட்டையில் பழமை யான ஜலகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பக்தர் கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை தினசரி இரவு 8 மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் எண்ணப்படும்.

அவ்வாறு நேற்றும் உண்டியலைத் திறந்து பணத்தை எண்ண முயன்றபோது அதில் 500, 1,000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் கத்தை கத்தையாகப் போடப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர். கறுப்புப் பண முதலைகள் பலரும் தாங்கள் பதுக்கி வைத் துள்ள பணத்தை கிழித்தும் மூட்டை மூட்டையாக எரித்தும் ஆற்றில் வீசி மிதக்கவிட்டும் வரு கின்றனர். இந்நிலையில், வேலூர் ஜல கண்டேஸ்வரர் கோயில் உண்டி யலிலும் யார் என்று தெரியாத வகையில் ரூ.44 லட்சம் காணிக் கையாகப் போடப்பட்டுள்ளது. “உண்டியலில் பணத்தை போட்டது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மத்திய அரசின் அபராதத் தண்ட னைக்குப் பயந்து உண்டியலில் யாரோ செல்லாத நோட்டுகளை போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

பக்தர்கள் முன்னிலையில் செயலாளர் சுரேஷ், நிர்வாகி சங்கரலிங்கம் உட்பட பணத்தை எண்ணும் பணியில் கோவில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 1,000 ரூபாயாக 30 கட்டுகள், 500 ரூபாயாக 28 கட்டுகள் என ஆகமொத்தம் 44 லட்சம் ரூபாய் இருந்தது. படம்: ஊடகம்