செல்லா நோட்டு: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

இம்மாதம் 9ஆம் தேதி முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்குத் தடை விதிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில், வங்கிகளிலும் தானியக்க வங்கி இயந்திரங்களிலும் (ஏடிஎம்) பணத்தை மாற்றுவதற்காக ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தொடர்வதால் மக்களின் சிரமங்களை, அசௌகரியங்களைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள, எதிர்காலத் தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு இந்திய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

செல்லா நோட்டு அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந் தனர். அந்த மனுக்கள் நேற்று விசா ரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் களில் சிலர், அரசாங்கத்தின் அறிவிப் புக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரினர்.