தள்ளாத வயதிலும் நேரில் சென்று 500 ரூபாய் நோட்டுகளை மாற்றிய மோடியின் தாயார்

நடப்பிலுள்ள ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இந்திய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டி வரும் வேளையில், 95 வயதிலும் சிரமம் பாராது வங்கிக்கே நேரில் சென்று செல்லாத நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளைப் பெற்று மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி ஹீராபென். குஜராத்தின் காந்திநகரில் உள்ள ஒரு தனியார் வங்கிக்குச் சக்கர நாற்காலி மூலம் சென்றார் திருமதி ஹீராபென். பின் உறவினர் இருவரின் துணையுடன் வங்கிக்குள் நடந்து சென்றார். அவரது கைகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைப் படங்கள் காட்டின.

குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்று செல்லாத நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளைப் பெற்றுக்கொண்ட இந்தியப் பிரதமர் மோடியின் தாயார் திருமதி ஹீராபென் (வலமிருந்து 2வது). படம்: இந்திய ஊடகம்