200 கிலோ தங்க கடத்தலை முறியடித்த கடலோர காவல்படை

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து கடத்தல் தங்கத்துடன் ராமேசுவரம் கடற்பகுதிக்குள் ஊடு ருவ முயன்ற கடத்தல்காரர்களை இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர். கடத்தல்காரர்கள் சுமார் 200 கிலோ தங்கத்துடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. கடந்த புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடத்தல்காரர்கள் இந்திய கடற்பகுதிக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர்.

ராமேசுவரம் தனுஷ்கோடியில் இருந்து 30 முதல் 40 கிலோமீட்டர் தூரத்தில் இலங்கையின் நெடுந்தீவு, மன் னார் கடற்கரைப் பகுதி அமைந் துள்ளது. இந்தக் கடல் பரப்பைப் பயன் படுத்தி இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து கஞ்சா, பிரவுன்சுகர் போன்ற போதைப்பொருட்களும் கடல் அட்டைகளும் கடத்தப்படு கின்றன. அதேபோல், இலங்கை யில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை பின்னிரவில் ராமேசுவரம் கடற் பகுதிக்குள் மர்மப் படகு ஒன்று ஊடுருவ முயன்றதைக் கண்ட இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினர், அதில் வந்தவர் களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!