பணம் எடுக்க விடியவிடிய ஏடிஎம் முன் காத்திருந்த மணமகன்

பஜன்புரா: டெல்லியில் உள்ள பஜன்புராவில் திருமணம் நடை பெற உள்ள நிலையில் மண மகன் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக விடிய விடிய காத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுனில் (படம்) என்பவருக்கு இன்று திருமணம் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து திரு மணத் தேவைக்காக சேவைகள் வழங்குவோர் பலருக்கும் பணம் கொடுக்கவேண்டியது இருந்ததால் பணம் எடுப்பதற் காக ஏடிஎம் முன் விடியவிடிய காத்திருந்துள்ளார். எனது மற்ற இரு சகோதரர்களும் அருகாமை யில் உள்ள ஏடிஎம்கள் முன் காத்திருக்கின்றனர் என்றும் சுனில் தெரிவித்தார்.

மக்கள் தங்களது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகவும் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காகவும் வங்கிகள், ஏடிஎம்கள் முன்பு நீண்ட வரிசை யில் காத்துக் கிடக்கின்றனர். பெரும்பாலான ஏடிஎம்களில் போதிய பணம் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கும் உள்ளாகி யுள்ளனர். இந்நிலையில் இன்று திரு மணம் நடைபெற உள்ள மண மகன் ஒருவர் பணத்தை பலருக்கும் பட்டுவாடா செய்வதற்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க காத்திருந்ததை பலரும் கதை கதையாகக் கூறி வருகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆழ்துளைக் கிணற்றில்  விழுந்து 50வது அடியில் சிறுவன் சிக்கியிருந்தான். படம்: ஊடகம்

15 Nov 2019

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவன் மீட்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் திரு உத்தவ் தாக்கரே. (படம்: ஏஎஃப்பி)

15 Nov 2019

சிவசேனா: உரிய நேரத்தில் சரியான முடிவு அறிவிக்கப்படும்