டீக்கடையில் இணைய கட்டண வசதி அறிமுகம்

புதுடெல்லி: பொதுமக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இணையம் வழி கட்டணம் செலுத்தும் வசதியை டெல்லி டீக்கடை உரிமையாளர் ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். வங்கிகள், ஏடிஎம்களில் போதுமான பணம் இல்லாததால் இணையப் பண பரிவர்த்தனை களை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியுள்ளனர். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனப் பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் உணவு, அத்தியாவசியப் பொருட் களை வாங்க சில்லறை தட்டுப் பாட்டால் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் மோனு என்பவர் தனது டீக்கடையில் இணையப் பணப் பரிவர்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்து உள்ளார். இதனால் இவரது கடைக்கு வரும் மக்கள் சிரமமின்றி டீ குடித்து இணையம் மூலம் பணம் செலுத்தி செல்கின்றனர். இதுகுறித்து மோனு கூறுகையில் "பணத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தவித்து வருவதால் அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்த முடிவை எடுத்தேன்," என்றார்.

டெல்லி ஆர்.கே.புரம் பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் மோனு. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!