மல்லையாவின் `1,200 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி

இந்தியாவைவிட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா வுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய ரூ.1,201 கோடி (S$251 மி.) கடனை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)' தள்ளுபடி செய்ய முடிவு செய்து இருப்பதாகச் செய்திகள் வெளி யாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக, கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய 63 பேரின் 7,016 கோடி ரூபாய் கடனை அவ்வங்கி தள்ளுபடி செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தத் தொகைகள் 'AUCA' எனும் சேகரிப்புக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டன. இருப் பினும் அந்தக் கடன் தொகைகள் மீண்டும் வசூலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வங்கி கூறியது. கிங்ஃபிஷர் நிறுவனத் திடம் இருந்து அத்தொகையைத் திரும்பப் பெற முடியும் என்ற நம் பிக்கையை அவ்வங்கி கிட்டத் தட்ட முழுவதும் இழந்துவிட்ட தற்கு அடையாளமாகத்தான் சேகரிப்புக் கடன் பட்டியலில் அது சேர்க்கப்பட்டிருக்கிறது என்று முன்னாள் எஸ்பிஐ தலைவர் ஒருவர் தெரிவித்ததாக என்டிடிவி கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!