மோடிக்கு ரூ.12 கோடி லஞ்சம் தரப்பட்டது: கெஜ்ரிவால்

வரி ஏய்ப்பு, ஊழல் மீது போர் தொடுத்திருப்பதாகப் பாசாங்கு செய்துவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது 12 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தி இருக்கிறார். ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் அறிவிப்பை எதிர்த்து, அதைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சித் தலைவர் களில் கெஜ்ரிவாலும் ஒருவர். மோடியின் இந்த திடீர் அறி விப்பை நிதித்துறை நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

இருப்பினும் அறிவித்த சில மணி நேரத்திற் குள்ளாக அது நடப்புக்கு வந்த தால் நாடு முழுவதும் பெரும்பான் மையான மக்கள் கையில் பணம் இல்லாது தவித்து வருகின்றனர். தங்களிடம் இருக்கும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள், 'ஏடிஎம்'கள் முன்னால் அவர்கள் கால்கடுக்கக் காத்துக் கிடப்பது தொடர்கிறது. இந்நிலையில், இந்த விவ காரம் குறித்து விவாதிப்பதற்காக நேற்று முன்தினம் டெல்லி சட்டமன்றம் கூடியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!