ஸ்டாலின் மருமகனுக்கு கருணாநிதி எதிர்ப்பு

சென்னை: கட்சியில் தனது மரு மகன் சபரீசனை முன்னிலைப் படுத்துவதால் மு.க.ஸ்டாலின் மீது திமுக தலைவர் கருணாநிதி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதையடுத்து சபரீச னுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிக ளிடம் அவர் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மு.க.ஸ்டாலினின் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருந்து வருகிறார் சபரீசன்.

கடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல் சமயங் களில், ஸ்டாலினின் பிரசார வியூ கங்கள், கூட்டணி தொடர்பான நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்தது சபரீசன்தான் என தமிழக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டன. தனது குழுவினருடன் இணைந்து சமூக வலைத்தளங்கள், இணையதளம் வழி ஸ்டாலினுடைய கருத்துக்களையும் திட்டங்க ளையும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சபரீசனுக்கு முக்கிய பங்குண்டு.