வாரத்திற்கு ரூ. 24,000 என்ற வரம்பு தளர்கிறது

மும்பை: ரூ.500, ரூ.1000 நோட்டு கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் வாடிக்கை யாளர்கள் பணம் எடுப்பதற்கு இந் திய அரசு உச்ச வரம்பு விதித்திருந் தது. அதன்படி வாரத்திற்கு வங்கிக் கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிகபட்ச மாக ரூ.24,000 வரை எடுக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அத்தொகையைப் பல தடவைகளில் பிரித்து எடுக்கு மாறு வாடிக்கையாளர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த நட வடிக்கை காரணமாகப் பொதுமக் களில் பலர் தங்கள் கைவசம் உள்ள பணத்தை வங்கிகளில் செலுத் தத் தயங்கினர்.

அத்தியாவசிய செலவுகளுக் குத் தேவைப் படும் என்று பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பலரும் வைத்துள்ளனர். பழைய ரூபாய் நோட்டுகளை முழுமையாகத் திரும்பப் பெற்றால் தான் நாடு முழுவதும் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்துப் பணப் புழக் கத்தை அதிகரிப்பதற்கு, பணம் எடுப்பதற்கான ரூ.24,000 என்ற உச்ச வரம்பை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை மத்திய வங்கி நேற்று முன்தினம் மாலை வெளியிட்டது.

பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனைச் சமாளிக்கும் வகையில் மத்திய அரசு, வங்கிகளில் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த உச்ச வரம்பை நீக்குவதாக நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வங்கிகள் பணத்தட்டுப்பாட்டைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் நிலையே உள்ளது. அதனால் நாட்டின் பல தானியங்கி வங்கிகள் 'பணமில்லை' என்ற அறிவிப்புப் பதாகையுடன் மூடியே கிடக்கின்றன. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!