காலணியின்றி 350 கி-.மீ. ஓடி சாதித்த நீலிமா

ஹைதராபாத்: ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த நீலிமா புடோட்டா என்பவர் புடவை அணிந்தவாறு விஜயவாடா முதல் விசாகப்பட்டினம் வரை 350 கி.மீ. தூரம் காலணியின்றி ஓடி சாதனை படைத்துள்ளார். இவர் பெண்கள் உடல்நல விழிப்புணர் வுக்காக இந்த ஓட்டம் நிகழ்த் தியதாகக் கூறினார். இதற்கு முன்னர் அவர், இமயமலை ஏறிய அனுபவம் பெற்றவர்.

இந்த ஓட்டம் பற்றி கருத்துத் தெரிவித்த நீலிமா, “பெண்கள் தங்கள் உடல் நலத்தைப் பேணிக் காக்க மறந்துவிடுகின்றனர். அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருது வதில்லை. நமது முன்னோர் ஆரோக்கிய மான வாழ்க்கை வாழ்வ தற்கு ஏராளமான வழிமுறை களைக் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் நாம் அதையெல்லாம் மறந்து விட்டு சொகுசாக வாழ்கி றோம் என்ற பெயரில் ஆரோக்கி யத்தை இழந்து வருகிறோம். “நமது முன்னோர் கடைப் பிடித்த வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பதன் வழி நாமும் ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க வேண்டும். அதனை வழியுறுத்துவதற்கே இந்த நீண்ட ஓட்டத்தை மேற்கொண்டேன்,” என்று கூறியுள்ளார் நீலிமா.

ஹைதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு காலணியின்றி ஓட்டப் பயணம் மேற்கொண்ட நீலிமா. படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்