புதையல் வெள்ளிக் காசுகளை பதுக்கிய எழுவர் மீது வழக்கு

நெமிலி: காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பாலாற் றில் மணல் அள்ளியபோது கிடைத்த புதையல் வெள்ளிக் காசுகளைப் பதுக்கிய எழுவர் மீதும் காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்தனர். இந்த ஏழு பேரிடமும் மொத்தமாக இருந்த 206 வெள்ளிக் காசு களையும் (படம்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த வெள்ளிக் காசுகளைத் தாசில்தார் இளஞ் செழியன் வேலூர் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்தார். அந்தக் காசுகள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆற்காடு நவாப்புகள் காலத் தைச் சேர்ந்தவை எனத் தெரிய வருகிறது. வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பூண்டியில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு டிராக்டரில் மணல் வாரிப் போடும் பணியில் சுமார் 300க்கும் அதிக மான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!