ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வழிபாடு

மும்பை நகரில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண் கள் நுழைந்துள்ளனர். பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு கள் ஆகியவற்றுக்குப் பிறகு நேற்று முன்தினம் பிற்பகலில் இந்த தர் காவுக்குள் பெண்கள் நுழைந் தனர். மும்பைக்குத் தெற்கே வோர்லி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தர்காவுக்குள் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த கிட்டத்தட்ட 80 பெண் கள் ஆர்வத்துடன் சென்றனர். 2012 ஜூன் மாதம் பெண்கள் இங்கு செல்லத் தடை விதிக்கப் பட்டது. அந்தத் தடையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண்கள் வழக்குத் தொடுத்தனர். 'வழிபாட்டில் பாகுபாடு காட்ட வேண்டாம்' என்று கூறிய நீதி மன்றம், தடையை நீக்க உத்தர விட்டது. ஆனால், உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் யும் வரை தடை தொடர தர்கா நிர்வாகம் அனுமதி கேட்டது. அந்தக் கோரிக்கையை நீதி மன்றம் ஏற்றது. இந்நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையின்போது முன்னிலையான தர்கா தரப்பு வழக்கறிஞர், ஹாஜி அலி தர்கா வுக்குள் பெண்களையும் அனு மதிக்க தர்கா நிர்வாகம் தீர் மானித்துள்ளதாகக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!