மீண்டும் பெண் பிள்ளை பெற்றவரை மொட்டையடித்து சித்திரவதை

இரண்டாவது பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெண்ணை அவரது கணவரே மொட்டையடித்து துன் புறுத்திய சம்பவம் உத்தரப் பிரதேசத் தில் நிகழ்ந்துள்ளது. ஆக்ரா அருகே மால்புரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த நன்னு என்னும் பெயர் கொண்ட அப்பெண்ணுக்கும் ர‌ஷித் என்பவருக்கும் மணமாகி ஏழாண்டு கள் ஆகின்றன. ஏற்கெனவே நான்கு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண் பிரசவித்தார். அதுவும் பெண் குழந்தையாகப் பிறந்தது.

ஆண் குழந்தைக்கு ஏங்கிய அப்பெண்ணின் கணவர் ர‌ஷித்தும் அவரின் குடும்பத் தாரும் இதனால் வெறுப்படைந்தனர். மீண்டும் பெண் குழந்தையைப் பெற்றதற்காக அந்தப் பெண்ணை அவர்கள் அனைவரும் சேர்ந்து தண் டித்தனர். அப்பெண்ணின் தலையை மொட்டையடித்ததோடு பிறந்த குழந்தைக்குப் பாலூட்ட விடாமலும் அவரைத் தடுத்துள்ளனர். இதனால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் விரக்தியடைந்த நன்னு, போலிசாரின் உதவியை நாடினார். தமக்கு நேர்ந்த கொடுமைகளை போலிசாரிடம் விளக்கினார். அதனைத் தொடர்ந்து கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!