ஒரே நாளில் 3 மேம்பாலங்கள் திறப்பு: பொதுமக்கள் வியப்பு

சென்னை: சென்னை வடபழனி, அமைந்தகரை அண்ணா வளைவு, ரெட்டேரி சிக்னல் ஆகிய 3 இடங் களில் கட்டப்பட்டிருந்த மேம்பாலங் கள் நேற்று முன்தினம் ஒரேநாளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திடீரென திறக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வடபழனி, அமைந்தகரை அண்ணா வளைவு, ரெட்டேரி சிக்னல் போன்ற மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் அண்ணா வளைவு அருகே மேம்பாலத்தின் ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டிருந்தது.

இதர மேம்பாலங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் உள் பட பல்வேறு அரசியல் அமைப்பு களும் வலியுறுத்தி வந்தன. குறிப் பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், தமிழக அரசு இந்த மூன்று மேம்பாலங்களையும் திறக் காவிட்டால் பாமக தலைமையில் அவை திறந்துவைக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை முதலாக இந்த மேம்பாலங்கள் வாகனமோட்டிகள் பயன்பாட்டிற்கு திடீரென திறந்து விடப்பட்டன. அதிகாரிகளே இதற் கான நடவடிக்கையை எடுத்திருந் தனர். மூன்று மேம்பாலங்களும் ஒரே நாளில் திறக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே வியப்பை ஏற் படுத்தியுள்ளது. இதன்மூலமாக அப்பகுதியில் தற்போது போக்கு வரத்து நெரிசல் குறைந்ததைக் காணமுடிந்தது.

திறக்கப்பட்ட மேம்பாலங்களில் ஒன்று. படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!