அருண் ஜெட்லி: ரூபாய் தட்டுப்பாடு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும்

புவனேசுவரம்: இந்தியாவில் பணத் தட்டுப்பாடு இன்னும் ஆறு மாதங் களுக்கு நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். நாடு முழுவதும் 86 விழுக்காடு புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி அறி விக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் அதற்கு ஈடாக 100 ரூபாய், 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவில்லை. இதனால் மக்களிடம் பணப் புழக்கம் முற்றிலும் முடங்கியது.

வங்கிகளில் கணக்கு வைத் திருப்பவர்கள் வாரத்துக்கு ரூ.24,000 வரை எடுத்துக்கொள் ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளிலும் வாடிக்கை யாளர்களுக்குக் கொடுக்க போது மான பணமில்லை. மேலும் பல ஏடிஎம் நிலையங்களும் பூட்டியே கிடக்கின்றன. நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு உள்ளதால் மக்கள் அவசர தேவைக்குக்குக்கூட பணமில்லாமல் திண்டாடுகின்ற னர்.

புதிய 2000 ரூபாய் நோட்டு களுக்கும் சில்லறை கிடைக்காத தால் மக்கள் மேலும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்த நிலையில் பணத்தட்டுப் பாட்டுப் பிரச்சினை இன்னும் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!