ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என முதல்வர் மம்தா அலறல்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என அலறியிருக்கிறார். ராணுவ வீரர்கள் குவிக்கப் பட்டதைத் கண்டித்து கோல்கத்தாவில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் மம்தா பனர்ஜி விடிய விடிய உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டார். மேற்கு வங்காளத்தில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு நேற்று முன்தினம் வந்த ராணுவ வீரர்கள், அவ்வழியாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்ப தாகவும் போர் போன்ற பரபரப்பான சூழ்நிலை உருவானால் இப் பகுதியில் செல்லும் வாகனங்களை மடக்கி ராணுவத்தின் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வதற்காக ஒத்திகை நடத்தப்படுவதாகவும் கூறினர்.

ஆனால் மாநில அரசுக்கு முன் கூட்டி தெரிவிக்காமல் தலைமைச் செயலகம், அதன் அருகில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி தெரி வித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக் கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் மம்தா, ராணு வத்தை விலக்கும் வரை தலைமைச் செயலகத்திலேயே தங்கியிருப் பேன் என்று அறிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!