கர்நாடக- கேரள எல்லையில் விசித்திர விலங்கு

பெங்களூரு: கர்நாடக- கேரள எல்லைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை விசித்திரமான விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளது. இதன் கைகளில் பயங்கர கூர்மையான நகங்கள் உள்ளன. இந்த விலங்கு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகளையும் மனிதர்களையும் உண்ணும் ஏலியன் வகை விலங்காக இருக்கலாம் என்றும் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர். “இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் கவனமாகச் செல்லுங் கள்,” என்றும் அதில் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் இது குறித்து அரசுத் துறைகள் சார்பான அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்

நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். கோப்புப்படம்: ஏஎப்பி

19 Nov 2019

பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க தயார் என்கிறார் பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு