ஆப்பிள் சாதனங்களின் பாதுகாப்பு வளையத்தைத் தகர்த்த மாணவர்

திருச்சூர்: கேரளாவைச் சேர்ந்த பொறியியல் மாணவரான ஹேமந்த் ஜோசஃப் (படம்) என்பவர் ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆக்டிவேஷன் லாக்’கை திறந்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஹேமந்த தமது நண்பருக்காக ஏற்கெனவே பயன்படுத் தப்பட்ட ஆப்பிள் ‘ஐபேட் ஏர்’ ஒன்றை வாங்கினார். ஆனால் அந்த ஐபேடின் முந்தைய உரிமையாளர் அதில் கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) போட்டிருந்த தால் அதனைத் திறக்க முடிய வில்லை. இதனால் ஐபேடை திறக்க ஹேமந்த் கடுமையாக முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆக்டிவேஷன் லாக்’கைத் திறக்க பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை அளிக்க வேண் டும்.

இதற்கான கட்டங்களில் எத்தனை எழுத்துகளை வேண்டுமானாலும் செலுத்த முடியும். இதனைப் பயன் படுத்திக்கொண்ட ஹேமந்த், ஐபேடை இணையத் தொடர்பில் இணைக்கும் முன்னர் பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகிய வற்றில் 10,000 எழுத்துகளை உள்ளீடு செய்துள்ளார். இதன் மூலம் ‘செக்யூரிட்டி கோட்’ திறந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐஃபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் ஆகிய வற்றின் ‘செக்யூரிட்டி லாக்’ அவற்றின் உரிமையாளரைத் தவிர வேறு எவராலும் திறக்க முடியாத அளவுக்கு மிகவும் பாதுகாப்பானது எனக் கூறப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்

பிரசாதம் வாங்க நெகிழிப் பைகளுக்குப் பதில்  சணல், காகிதம், அட்டை போன்றவற்றாலான பைகள், பெட்டிகள் பயன்படுத்தப்பட வேண்டும் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. கோப்புப்படம்

20 Nov 2019

சணல் பையில் லட்டு; திருமலை ஆலய நிர்வாகம் முடிவு