ஜன.1 முதல் ரயில் நிலையங்களில் ரொக்கமற்ற பரிவர்த்தனை

புதுடெல்லி: ரயில் நிலைய பயணச் சீட்டு முகப்புகளில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து கிரெடிட், டெபிட் கார்டுகளை 'ஸ்வைப்' செய்யும் வசதி அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பிற்குப் பிறகு நாடு முழு வதும் பணம் இல்லாத பரிவர்த் தனைத் திட்டத்தை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையங்களில் டெபிட், கிரெடிக் கார்டு களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சில முக்கியமான பயணச்சீட்டு பதிவு மையங்களில் மட்டும் 'ஸ்வைபிங்' கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. வரும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அனைத்து மையங்களிலும் இக்கருவி மூலம் பணப் பரிமாற்றத்தைக் கட்டாயமாக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக 15,000 ஸ்வைப் இயந்திரங்களை ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி களிடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!