புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தில் மழை வெளுத்துக் கட்டியது

சென்னை: நாடா புயல் வலுவிழந்த போதிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை, மதுரையில் நேற்று முன்தினம் மதியம் முதல் மழை வெளுத்துக் கட்டியது. இதில் சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. நாடா புயல் நாகை, காரைக்கால் இடையே கரையைக் கடந்துள்ளது. பின்னர் வலுவிழந்த அப்புயல் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி யாக மாறியது. இதன் காரணமாகவே மாநிலத் தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. வெள்ளிக்கிழமை மதியம் பெய்யத் துவங்கிய மழையால், சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதனால் வாகனமோட்டி கள் சிரமங்களை மேற்கொண்டனர். கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு நிறுத்தி நிதானமாக மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூர், சேலம், கரூர், நாமக்கல் பகுதிகளில் நேற்று முன்தினம் நல்ல மழை பெய்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!